உள்ளூர் செய்திகள்

சிகிச்சைக்கு பின் மனநலம் பாதித்த பெண்ணை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

போடியில் மனநலம் பாதித்த பெண் சிகிச்சைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2023-11-21 05:31 GMT   |   Update On 2023-11-21 05:31 GMT
  • மனநலம் பாதித்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • குணமடைந்த பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி-மூணாறு செல்லும் சாலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்க ப்பட்டு உடல் சோர்வுடன் மரணத்தருவாயில் சுற்றி திரிந்தார்.

அவரை மீட்டு மாவட்ட எஸ்.பி உத்தர வின்பேரில் போடி டி.எஸ்.பி மற்றும் போலீசார் சுப்பு லாபுரம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், பெண் காவலர் மகாலட்சுமி ஆகியோர் பெரியகுளம் அரசு மனநல மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ததனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது முழுகுணம் அடைந்ததுடன் அவரை விசாரணை நடத்தியதில் தான் முந்தல் மேலபரவு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடியினர் என்றும் பெற்றோரை இழந்ததால் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்ததாகவும் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் உறவினர்களி டம் ஒப்படை த்தனர்.

Tags:    

Similar News