உள்ளூர் செய்திகள்

சர்வதேச தொழில்முனைவோர் வர்த்தக மாநாடு- மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-28 10:02 GMT   |   Update On 2022-06-28 10:02 GMT
  • சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
  • உலகெங்கிலும் தொழிலதிபர்களாக திகழும் பல்வேறு துறைகளில் பல்வேறு வணிகங்களில் சாதித்துவரும் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்படைய செய்திருந்தார்கள்.

சென்னை:

உலக பறையர் கூட்டமைப்பு (டபுள்யு பி எப்) சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் வர்த்தக மாநாடு கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் சிம்சன் அரங்கத்தில் நடந்தது.

மாநாட்டுக்கு கூட்டமைப்பின் தலைவரும் சென்னை துறைமுக பொறுப்பு கழக முன்னாள் அறங்காவலரும் நடிகருமான சி.ஜெய் ராஜ்குமார் தலைமை தாங்கினார். விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மேலும் அரங்கத்தில் உள்ள ஸ்டால்களை திறந்து வைத்து பார்வையிட்டு பாராட்டுகளையும தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உலகெங்கிலும் தொழிலதிபர்களாக திகழும் பல்வேறு துறைகளில் பல்வேறு வணிகங்களில் சாதித்துவரும் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்படைய செய்திருந்தார்கள்.

தமிழ்நாடு மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர். கண்ணகி பாக்கியநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ராஜேந்திரன் வரவேற்புரையும் டாக்டர் எம்.எஸ். செந்தில்குமார் விழா அறிமுக உரையும் நிகழ்த்தினார்கள். விழாவில் ஆதி திராவிட நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி தொழில் வாய்ப்புகளை பற்றியும், அது குறித்து விரிவான ஆலோசனைகளையும் வழங்கினார்.

டாக்டர் வி. ராஜ்குமார் மருத்துவ துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள் பற்றியும், தாட்கோவிலிருந்து துணை மேலாளர் தனலட்சுமி பல்வேறு வாய்ப்புகளை பற்றியும் விளக்கி கூறினார்கள். பல்வேறு தொழில் துறைகளில் சாதித்தவர்களுக்கும் கல்வி விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியாவிலிருந்து டத்தோ பாஸ்கரன், கத்தாரில் இருந்து டாக்டர் எஸ். கதிரவன், மும்பையிலிருந்து வி பாஸ்கர் ராஜ், ராஜு சண்முகம், அந்தமான் சேது, துபாய் முரளி சேகரன், பெங்களூருவில் இருந்து பாரதிராஜா, கருணாகரன், கோவை சங்கரபாண்டி, சென்னை பி.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஒளி மற்றும் வடிவமைப்பு இளங்கோவன், கோபி, பெருமாள், திவாகர், நாராயணன் ஆகியோரும், மெஸியா ஸ்டுடியோ ஜான் பீட்டரும் வரவேற்பை நட்சத்திரா, தமிழ்ப்பிரியன் ஆகியோரும் செய்து இருந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை அகிலன், அனுசுயா ஆகியோர் செய்து இருந்தனர்

Tags:    

Similar News