உள்ளூர் செய்திகள்

தீர்த்தமலையில் மாசி மகா தேர் திருவிழா

Published On 2023-03-07 15:38 IST   |   Update On 2023-03-07 15:38:00 IST
  • 10-ம் தேதி தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
  • தேர் திருவிழாவுக்கு வருகை தந்து உற்சவத்தை பார்த்து சாமி தரிசனம் செய்வார்கள் என ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருத்தேர் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து 5-ம் நாள் வருகிற 10-ம் தேதி தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

ஏழாவது நாள் 12-ம் தேதி ஞாயிற்று கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்று விநாயகர் தேர், அம்மன் தேர், வடிவாம்பிகை உள்ளிட்ட மூன்று தேர் உற்சவம் ஒரே நாளில் நடைபெறுகிறது.

விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேர் திருவிழாவுக்கு வருகை தந்து உற்சவத்தை பார்த்து சாமி தரிசனம் செய்வார்கள் என ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News