உள்ளூர் செய்திகள்

பெண்கள் தீர்த்த பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற காட்சி.

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-06-24 15:29 IST   |   Update On 2023-06-24 15:29:00 IST
  • பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
  • பாலாபிஷேகம் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மா தேவி கோயிலில், ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக பிரதிஷ்டை விழா கடந்த 23-ம்தேதி துவங்கியது.

விழாவையொட்டி கோவிலில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் 'நடைபெற்று வருகிறது. நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் மேள தாளங்களுடன் அம்மனுக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

அப்போது பெண்கள் அருள் வந்து ஆடினர். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பெரிய ஏரிக்கு சென்ற பக்தர்கள், அங்கு நாகர் சுவா மிக்கு சிறப்பு வழிபாடுகள்செய்தனர்.

பின்னர் அங்கிருந்து புனித தண்ணீர் எடுத்துக்கொண்டு தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

தொடர்ந்து கோயிலில் சேலத்து மாரியம்மன், எல்லம்மா தேவி சுவாமிகளுக்கு பாலாபிஷேகம் மற்றும் புனிதநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப் பட்டது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேன்கனிக்கோட்டையில் உள்ள சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லம்மா தேவி கோவிலில் ராஜகோபுரம் மகாகும்பாபிஷேக பிரதிஷ்டை விழாவையொட்டி பெண்கள் தீர்த்த பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

Similar News