உள்ளூர் செய்திகள்
முதல் மனைவியை தாக்கிய வழக்கில் கணவர் கைது
- கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள தொட்ட திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவபிரியா (வயது 25).
இவருக்கும் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் 2-வது திருமணம் செய்து கொண்ட விஜய் தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீட்டின் சாவியை தர சொல்லி கேட்டு சிவபிரியாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.
இது குறித்து சிவபிரியா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.