பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.
மதுரை
காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலா ளர் பால்ச்சாமி தேவர் படத்திறப்பு, பிரைஸ் அறக் கட்டளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி னார். தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், ராஜேந்திரன், ஜெயப்பெருமாள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்ெதாகை, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், நெல் விதை கள், பெண்களுக்கு சேலை, தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள் ஆகியவற்ைற அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி னார்.
இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., திருச்சுழி யூனியன் சேர்மன் பொன்னுத்தம்பி, காரியா பட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரியாப்பட்டி என்.பி.எம். டிரஸ்ட் நிறு வனர் அழகர்சாமி நன்றி கூறினார்.