உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக்கவசம்

Published On 2022-12-31 07:52 GMT   |   Update On 2022-12-31 07:52 GMT
  • புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது.
  • ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

திருப்பரங்குன்றம்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். குடவரை கோவிலான இங்கு ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பு சித்திரை 1-ந்தேதி மூலவருக்கு தங்க கவசமும், ஆங்கில வருட பிறப்பு நாள் அன்று மூலவருக்கு வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.

நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கருவறையில் உள்ள சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாற்றுபடியாகிறது. இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்படும்.

உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெறும். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags:    

Similar News