உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த மூதாட்டி

Published On 2023-06-09 15:13 IST   |   Update On 2023-06-09 15:13:00 IST
  • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தஞ்சமடைந்தார்.
  • அவரது மகன் சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

மதுரை

மதுரை புதூர் கற்பகநகர் பகுதியில் வசித்து வருபவர் அன்னம்மாள். இவரது கணவர் குப்பன் கடந்த 2020-ம் ஆண்டு உயிரி ழந்தார். இவர்களுக்கு குற்றாலராஜா, சரவண பாண்டி என 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது மகன்சரவண பாண்டி பெற்றோரின் சொத்துக்களான வீடுடன் கூடிய 2 சென்ட் இடத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த மகன் குற்றால ராஜா தனக்கு மீதமுள்ள சொத்துக்களை தருமாறு தாய் அன்னம்மாளிடம் கேட்டு ெதாந்தரவு செய்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அன்னம்மாள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார். சொத்துக் களை பெற்றுக்கொண்டு மகன்கள் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தாய் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்த மகன் குற்றால ராஜா அங்கு வந்து அன்னம்மாளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

Tags:    

Similar News