உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சரவணப்பொய்கை பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சிறப்பு வசதி

Published On 2023-09-28 08:25 GMT   |   Update On 2023-09-28 08:25 GMT
  • கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப்பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
  • இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல் படை வீடாக போற்றப்ப டும் திருப்பரங்குன்றம் சுப் பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை பகுதியில் அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது மற்றும் சிறப்பு யாக வேள்வி நடத்துவது வழக்கம். அமாவாசை தோறும் இங்கு திருப்பரங்குன்றம் மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏராளமா னோர் தங்களது மூதாதை யரின் நினைவாக தர்ப்ப ணம் கொடுத்து சரவணப் பொய்கையில் புனித நீராடி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கடும் வெயில் மற்றும் மழையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

இது குறித்து பக்தர்கள் கோரிக்கையின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் பக்தர்கள் தங்களது முன் னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை யும், சிறப்பு யாக கேள்விக ளையும் தடையின்றி செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News