உள்ளூர் செய்திகள்
- திருமங்கலம் அருகே மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை திருமங்கலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சார்பில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. திருமங்கலம் சேடப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்ட பொறியாளர் லாவண்யா, இளநிலை பொறியாளர் சுந்தரவடிவேல், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.