உள்ளூர் செய்திகள்

 மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகள் அகற்றப்பட்ட காட்சி

2-வது நாளாக கடைகள் அகற்றம்

Published On 2022-06-19 08:46 GMT   |   Update On 2022-06-19 08:46 GMT
  • மீனாட்சி அம்மன் கோவிலில் 2-வது நாளாக கடைகள் அகற்றப்பட்டன.
  • ேகாவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளில் பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கி வந்தனர்.

மதுரை

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

இந்த நிலையில் கோவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளில் பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கி வந்தனர். கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த சேதம் ஏற்பட்டது

இந்த தீ விபத்துக்கு அங்கு செயலபட்ட கடைகள் ஒரு காரணம் என தெரியவந்ததால் அவை களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முதல் கோவில் வளாகத்தில் செயல்பட்ட கடைகளை அகற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக கடைகள் அகற்றப்பட்டன. மொத்தம் 60 கடைகள் அகற்றப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதியில் காலி செய்யப்பட்ட கடைகளின் பெட்டி உள்பட தளவாட சாமான்கள் உள்ளது. எனவே அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 12 கடைகளின் உரிமை யாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். எனவே அந்த கடைகளை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை காலி செய்யக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News