உள்ளூர் செய்திகள்
- மதுரையில் நர்சு வீட்டில் நகை திருடப்பட்டது.
- மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர், சிங்கம் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி பகவதி. இவர் மதுரை மேலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, 100 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற னர். இது தொடர்பாக பகவதி செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.