உள்ளூர் செய்திகள்

சுங்கசாவடி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்த போது எடுத்த படம்.

வாகன ஒட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம்-பரபரப்பு

Published On 2022-07-02 12:51 IST   |   Update On 2022-07-02 12:51:00 IST
  • கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஒட்டிகள் வாக்குவாதம்-பரபரப்பு ஏற்பட்டது.
  • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி திருமங்கலம் நகராட்சி எல்லை பகுதியில் செயல்பட்டு வருகிறது. எனவே உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இருந்த போதிலும், சில நேரம் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்டதால் பொதுமக்களுக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் திருமங்கலத்தில் இருந்து வந்த தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளனர். இதனால் உள்ளுர் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் திருமங்கலத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News