உள்ளூர் செய்திகள்

புதிய மின்மாற்றியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

புதிதாக நிறுவப்பட்ட 2 டிரான்ஸ்பார்மர்களை தொடங்கி வைத்த அமைச்சர்

Published On 2023-04-27 08:51 GMT   |   Update On 2023-04-27 08:51 GMT
  • மதுரை சூர்யா நகரில் 2 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்பட்டது.
  • இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யாநகர் அருண்சிட்டி பகுதியில் மின் பகிர்மான கழகம் சார்பில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூர்யா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தின்போது இந்த பகுதியில் சீரான மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி தற்போது இந்த பகுதியில் உள்ள அருண் சிட்டியில் 2 புதிய மின்மாற்றி கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.

அதேபோல சுத்தமான குடிநீர் விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் மாநகராட்சியின் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டு களில் இந்த பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News