ரெயில் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
- ரெயில் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
- இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.
மதுரை
நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 6 பேர் அடங்கிய தேசிய ரெயில்வே பயணிகள் வசதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரவிச்சந்திரன், மதுசூதனா, கோட்டோலா உமா ராணி, அபிஜித் தாஸ், ராம்குமார் பஹான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் 3 நாட்கள் பயணமாக மதுரை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை தீவிர ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போது முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, மூத்த கோட்ட என்ஜினீயர் பிரவீனா(தெற்கு), கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். நாளை மறுநாள் (8-ந் தேதி) கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.