உள்ளூர் செய்திகள்
நிறுவனர் கே.கே.செல்வகுமார்
தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா
- தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது.
- மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.
மதுரை
மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது. ஆலாத் தூரில் உள்ள கணேஷ் மகாலில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு தென்மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரை யாற்றுகிறார்.
மாநில பொதுச் செய லாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப் பாளர் குரு மணிகண்டன் உள்பட தலைமை நிர்வாகி கள் பேசுகிறார்கள்
இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப் பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்ற னர்.
தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட பொறுப் பாளர் அறிமுக விழா விற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.