உள்ளூர் செய்திகள்

அரசரடி ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

Published On 2022-07-10 09:16 GMT   |   Update On 2022-07-10 09:16 GMT
  • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
  • இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரித் பண்டிகை ஆகும். இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

மதுரை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி னர். இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து உற்சா கத்துடன் அதிகாலை நேரத்தில் மசூதிக்கு புறப்பட்டு சென்றனர்.

மதுரை மாநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசரடி ஈத்கா மைதானம், காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல், சிம்மக்கல் மக்கா ஜும்மா‌‌ பள்ளிவாசல், நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், முனிச்சாலை கரீம்ஷா பள்ளிவாசல், கோரிப்பாளையம் தர்ஹா பள்ளிவாசல், முஸ்லிம் மேலகார ஜமாத் பள்ளி வாசல். மாட்டுத்தாவணி பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு மசூதி சம்மட்டிபுரம் புதுப்பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகையின் முடிவில் இஸ்லாமிய மத குருமார்கள் பக்ரீத் பண்டிகையின் முக்கியத்து வம், நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து கூறினர்.

பக்ரித் பெருநாள் தொழு கையை நிறைவேற்றிய பிறகு இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் இறை வனுக்கான கடமையை நிறைவேற்றும் வகையில், ஆடுகளை பலியிட்டு, இறைச்சிகளை ஏழை எளியோருக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

Tags:    

Similar News