உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு

Published On 2022-11-24 06:48 GMT   |   Update On 2022-11-24 06:48 GMT
  • மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
  • குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க. அவை தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சுமார் 1219 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 274 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

தமிழக அரசின் வருவாய் அனைத்து துறையிலும் உயர்த்து கொண்டிருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். வணிகவரி மற்றும் பதிவு துறை சார்பில் வரும் மார்ச் மாதத்திற்குள் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு ஈட்டி தர திட்டமிட்டுள்ளோம். தற்போது வரை ரூ.95 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளோம். முதியோர் உதவித்தொகை, விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகளிர் உதவித்தொகை, விபத்து காப்பீடு, வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முடுவார் பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் சமயலறை கூடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துராமன், ஜெயமணி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி, துணை தலைவர் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி, அணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், சந்தனகருப்பு, மருது, மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, குழந்தைகள் வளர்ச்சித் துறை, பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News