வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள்
- வாடிப்பட்டியில் கலைவிழா போட்டிகள் நடந்தது.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
பள்ளிக்கல்வித் துறை சார்பில் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, கவுன்சிலர் சரசு ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரவண முருகன் வரவேற்றார். இந்த போட்டியில் 16 அரசு நடுநிலைப்பள்ளிகள், 4அரசு உயர்நிலைப்பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வட்டார வள மையம் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள்லெட்சுமி, பாண்டிக்குமார், பெரியகருப்பன், சரண்யா, அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போட்டியினை நடத்தினர். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷா நன்றி கூறினார்.