உள்ளூர் செய்திகள்

முகாமில் ஒரு பெண்ணுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணை

Published On 2022-12-25 08:18 GMT   |   Update On 2022-12-25 08:18 GMT
  • 522 பேருக்கு தனியார் துறையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மூரத்தி வழங்கினார்.
  • வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை கூடல்நகரில் உள்ள ஜெயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா தலைமை தாங்கினார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் தனியார் துறையைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் வேலை பெறுவதற்காக மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி 522 பேரை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வான 522 பேருக்கும் தனியார் துறையில் பணி ஆணையை வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மண்டல தலைவர், வாசுகி சசி குமார், மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டி, பகுதி செய லாளர் சசிகுமார்,வக்கீல் கலாநிதி,வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News