உள்ளூர் செய்திகள்

44 கடைகள் மீது நடவடிக்கை

Published On 2022-08-14 09:23 GMT   |   Update On 2022-08-14 09:23 GMT
  • மதுரையில் பொட்டல விதிமுறை மீறலில் ஈடுபட்ட 44 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தெரிவித்து உள்ளார்.

மதுரை

மதுரை கூடுதல் தொழி லாளர் கமிஷனர் வழிகாட்டுதலின்படி, இணை கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை மாவட்டத்தில் கடந்த 11, 12-ம் தேதிகளில் பொட்டல பொருட்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் விதிமுறைகளை மீறி பொட்டல பொருட்களை விற்பனை செய்த 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே நுகர்வோர் நலன் கருதி, தயாரிப்பாளர் முகவரி, பொட்டலத்தின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட மாதம்- ஆண்டு ,அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

வணிகர்கள் அனைவரும் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரை யிட்டு பயன்படுத்த வேண்டும். வெளி மாநில தொழி லாளரை பணி யமர்த்தும் நிறுவனங்கள், அவர்களின் பெயர், விபரங்களை labour.tn.gov.in/ism இணையதளத்தில் கட்டாயம் விடுதலின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News