உள்ளூர் செய்திகள்

புதிய தார்சாலை அமைக்கும் பணியை கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார்.

87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி

Published On 2023-08-04 08:38 GMT   |   Update On 2023-08-04 08:38 GMT
  • 87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.
  • ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி 87-வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. கவுன்சிலர் காளிதாசிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக அவர் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புதிய சாலை அமைக்க வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் அரசு நிதியாக ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி இன்று நாகம்மா கோவில் தெரு, சமயபுரம் கோவில் தெரு, அண்ணாமலையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணி யினை 87-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலரின் முயற்சி யால் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதை வார்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் சுபாஷ் ஸ்ரீ மற்றும் ராஜா, சண்முகநாதன், ராம்ராஜ், சங்கர், பஞ்ச வர்ணம். மேகலா. செல்வி, ராஜா. ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News