உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் கிராமத்தில் புதிய மின் கம்பம் அமைக்கும் பணியை தலைமை பொறியாளர் உமா தேவி ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் உள்ளனர்.

6100 மின்கம்பங்கள் மாற்றம்

Published On 2022-06-22 09:47 GMT   |   Update On 2022-06-22 09:47 GMT
  • மதுரை மண்டலத்தில் 6100 மின்கம்பங்கள் மாற்றம் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
  • இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பழுதான மின் கம்பங்கள் மற்றும் பணி தொடங்கியது. இதனை மதுரை மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகமெங்கும் பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதனடிப்படியில் முதற்கட்டமாக உயர்அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதான மின்கம்பங்கள் 3100, புதிதாக அமைக்கும் மின்கம்பங்கள் 3,000 என மொத்தம் 6 ஆயிரத்து 100 மின்கம்பங்களும் ஜூலை 15 -ம் தேதிக்குள் மாற்றிவிட இலக்கு நிர்ணயம் செய்து பணிசெய்து வருகிறோம்.

மேலும் மின்பாதைகளில் உள்ள மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News