உள்ளூர் செய்திகள்

பசுமலை மன்னர் கல்லூரியில் குரூப்-4 தேர்வு எழுத வந்த பெண்கள்.

1 லட்சத்து 17 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்

Published On 2022-07-24 08:01 GMT   |   Update On 2022-07-24 08:01 GMT
  • மதுரை மாவட்டத்தில் இன்று 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்.
  • முன்னதாக தேர்வர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மதுரை

தமிழகத்தில் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 7,301 காலி யாக உள்ளன. இதற்கான தேர்வை நடத்துவது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று (24-ந்தேதி) தேர்வு நடந்தது.

இதையொட்டி மதுரை மாவட்டத்தில் மதுரை, கள்ளிக்குடி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 419 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 569 பேர் தேர்வு எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வை 419 அதிகாரிகள் கண்காணித்தனர். இது தவிர 96 கண்காணிப்பு குழுவினர், 14 பறக்கும் படை குழுவினர் ஆகியோர் பணியில் தீவிர மாக ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே விண்ணப்பதாரர்கள் மையத்துக்கு வந்து விட்டனர். அப்போது அவர்களுக்கு கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணிந்து தேர்வு எழுதும் அறைக்கு சென்ற னர்.

அங்கு அவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

முன்னதாக தேர்வர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது. இந்த தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

Tags:    

Similar News