உள்ளூர் செய்திகள்

மடிப்பாக்கம் அருகே கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-08-05 14:05 IST   |   Update On 2022-08-05 14:06:00 IST
  • கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது.
  • மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலத்தூர்:

மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டை என்.எஸ்.கே சாலையில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். இன்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு பணப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் 3 வாலிபர்கள் கடைக்குள் புகுந்து திருடிச் செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து மடிப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News