உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே அரசு பஸ்சில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
- அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
- புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார்.
விழுப்புரம்:
மரக்காணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் , அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார்சாசோதனை செய்தனர். அப்போது சாராயம் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டாள் குப்பம் சித்தூரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என தெரியவந்தது. இவர் இவர் புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.