உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டுவிழாவை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தகாட்சி. அருகில் கலெக்டர் ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ., உள்பட பலர் உள்ளனர்.

சங்கரன்கோவிலில் நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Published On 2023-04-26 08:37 GMT   |   Update On 2023-04-26 08:37 GMT
  • அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
  • கனிமொழி எம்.பி. தன்னையும் நூலகத்தில் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முழுநேர நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வரவே ற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நூலகத்தில் தன்னையும் ஒரு புரவலராக இணைத்துக் கொண்டார்.

இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா, தமிழ்நாடு அரசு கால மாற்ற குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபீர், லயன்ஸ் கிளப் ஆளுநர் அய்யாதுரை, பாரதி வாசகர் வட்டம் கவுரவ தலைவர் வெள்ளைச் சாமி என்ற செல்வம், பள்ளி மேலா ண்மை குழு உறுப்பினர் கவுன்சிலர் முத்துமாரி பிரகாஷ், பாரதி வாசகர் வட்டம் தலைவர் ஆசிரியர் சங்கர்ராம், வட்டார நூலகர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செய லாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணி சாமி, இளைஞர் அணி சரவணன் ஆசிரியர் நாரா யணன், நூலகர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார நூலகர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News