உள்ளூர் செய்திகள்

தென்காசியில் நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி தொடக்கம்

Published On 2023-11-05 08:00 GMT   |   Update On 2023-11-05 08:00 GMT
  • 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடை பயிற்சியை மேற்கொண்டனர்.

தென்காசி:

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் தொடங்கி காசிமேஜபுரம், இலஞ்சி குமாரசாமி கோவில் சுற்றுப்பாதை வழியாக 8 கிலோமீட்டர் நடை பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பழனி நாடார், ராஜா மற்றும் மருத்துவ துறையின் இணை இயக்குனர் முரளிசங்கர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சுரண்டை ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், தென்காசி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர், அரசு வக்கீல் வேலுச்சாமி, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா, மேலகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் சுடலை, பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், இலஞ்சி பேரூர் தி.மு.க. செயலாளர் முத்தையா, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிடர் மாடசாமி, நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர துணைத் தலைவர்கள் சித்திக், தேவராஜன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், தென்காசி ராமராஜ், கு.மூர்த்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News