உள்ளூர் செய்திகள்

குன்னூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்

Published On 2023-09-27 13:31 IST   |   Update On 2023-09-27 13:31:00 IST
  • அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
  • வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி உலா வருகிறது. அவ்வப்போது வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் பகுதிக்கு ஒரு சிறுத்தை வந்து அங்கு திரிந்த பூனையை வேட்டையாடி சென்றது. தொடர்ந்து பாய்ஸ் கம்பெனி, அருவங்காடு கேட்டில் பவுண்ட், மவுண்ட் பிளசன்ட் ஆகிய பகுதிகளில் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி கவ்வி சென்றது.

இந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவாரமாக சிறுத்தைகள் நடமாடடம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிகமாக காணபடுவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News