கிருஷ்ணகிரியில் சட்ட விழிப்புணர்வு வாகனம்
- கிருஷ்ணகிரியில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டு தலின் படி தேசிய சட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம்.சுமதிசாய் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட நீதிபதி பேசியதாவது:-
சட்ட சேவையின் ஒரு அங்கமாக பொதுமக்கள் இலவச சட்ட உதவிகளை போன் மூலம் பெறலாம். தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் செயலி மூலம் இலவச சட்ட உதவிகள் தேவைப்படுபவர்கள் தங்களின் போனில் மேற்கண்ட செயலியை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தங்களின் பிரச்சினைகளை பதிவு செயயலாம்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்கறிஞர் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தீர்வுகளை வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நீதிமன்ற ஊழி யர்களால் வரையப்பட்டிருந்த தேசிய சட்ட விழிப்புணர்வு கோலத்தை பலரும் பார்வையிட்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சட்டம் சம்பந்தமான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி எஸ். நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி எம்.அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி வி.சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி எம்.எம்.அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி என்.மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.டி.ஜெனிபர், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் ஜி.யுவராஜ், ஏ.இருதயமேரி, மாஜிஸ்திரேட்டுகள் கே.கார்த்திக் ஆசாத், ஏ.ஸ்ரீவர்ஸ்தவா, வக்கீல் சங்க துணை தலைவர் சுரேகா, செயலாளர் சத்திய நாராயணன் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.