உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதிகளில் கசிவுநீர் குட்டைகள்

Published On 2023-08-24 09:14 GMT   |   Update On 2023-08-24 09:14 GMT
  • காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
  • வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. அங்கு கரடி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு விலங்குள் வாழ்கின்றன.

நீலகிரியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. எனவே காட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

எனவே காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்போது அவை குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று அங்கு உள்ள விளை நிலங்களை நாசப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.

இந்த நிலையில்கூடலூா் வனச்சரகத்தில் குடிநீா் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக 2022-23ம் ஆண்டு நபாா்டு திட்டத்தின் கீழ், வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தடுப்பணைகள் மற்றும் கசிவுநீா் குட்டைகள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் யானை, புலி போன்ற வன விலங்குகளின் நீா்த்தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். மேலும் காட்டு விலங்குள் ஊருக்குள் வருவதும் கட்டுப்படுத்தபடும்என்று வனத்துறையினா் தெரிவித்து உள்ளனா்.

Tags:    

Similar News