உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அழகிய ஐயனார்- சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-06 09:41 GMT   |   Update On 2023-09-06 09:41 GMT
  • 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்றது.
  • 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த நரிமணத்தில் உள்ள பூர்ணபுஷ்கலா அழகிய ஐயனார், சந்திரமதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தன பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை மஹாலட்சுமி ஹோமம், தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து, 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்று, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 3-ந் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News