உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் துர்கா ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்- துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தினர்

Published On 2022-09-05 15:43 IST   |   Update On 2022-09-05 15:43:00 IST
  • கோவிலை புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.
  • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

சீர்காழி,:

மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இக்கோவில் முதல் அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயிலாகும்.

சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயில் புண ரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் நிறைவடை ந்து 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 3


3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.

பின்னர் கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா,

எஸ்.பி நிஷா மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Tags:    

Similar News