உள்ளூர் செய்திகள்
குட்கா கடத்திய கார் பறிமுதல்.

கிருஷ்ணகிரி காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

Published On 2022-06-09 16:18 IST   |   Update On 2022-06-09 16:18:00 IST
  • காரில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்.

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகன் ரகுநாதன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், 323 கிலோ அளவிலான, 2 லட்சத்து, 84 ஆயிரத்து, 600 ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தியது தெரிந்தது.

விசாரணையில் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 38), திருவள்ளூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (33) ஆகியோர் பெங்களூருவில் குட்கா பொருட்களை வாங்கி சென்னையில் விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News