உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2023-03-26 15:17 IST   |   Update On 2023-03-26 15:17:00 IST
  • பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
  • நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பரவலாக மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.

வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி, பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை, மத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழையால் நேற்று வெயில் தணிந்து காணப்பட்டது.

நேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 442 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 328 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.

Similar News