உள்ளூர் செய்திகள்
இருள் சூழ்ந்து காணப்படும் கோவில்வழி பஸ் நிலையம்
- இரவு நேரங்களில் வரும் பயணிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
- இலவச கழிவறையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் கோவில் வழி பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் பயணிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கியமாக பெண்கள் கழிவறை செல்லும் இடங்களில் இரவு சூழ்ந்துள்ளதால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறிகள் உள்ளிட்டவைகள் நடைபெறாமல் இருக்க மின்விளக்குகளும் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். மேலும் பொதுக்கழிவறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பயனாளிகள் அங்கு செல்லவே முடியாத சூழ்நிலை உள்ளதால் இலவச கழிவறையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.