உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த பெண் திடீர் மாயம்

Published On 2023-10-07 12:41 IST   |   Update On 2023-10-07 12:41:00 IST
  • எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை

 வேலா யுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே குட்டைக்கடை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 67) .இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனபாலனின் மகள் சற்று மன வளர்ச்சி குன்றியவராக இருந்து வருகிறார். மனவளர்ச்சி குன்றிய மகளை தாயார் ரேவதி கவனித்து வந்தார். இந்நிலையில் ரேவதி தனது மனவளர்ச்சி குன்றிய மகளை தன்னால் இனி பார்த்துக் கொள்ள முடியா து என்று தொடர்ந்து கூறி வந்தார்.

அதற்கு விரைவில் ஒரு முடிவு செய்வதாகவும், மாற்று ஏற்பாடு செய்வ தாகவும் அவரது கணவர் தனபாலன் தெரி வித்துள்ளார். இந்நிலையில் தனபாலன் வீட்டிலிருந்து வெளியில் சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து அவரது மனைவி ரேவதியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்தும் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தும் ரேவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ரேவதி வீட்டிற்கும் வரவில்லை .அதனால் அதிர்ச்சி அடைந்த தனபாலன் இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேவதி வீட்டில் இருந்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வீட்டில் இருந்தபோது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? எப்படி மாயமானார் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News