உள்ளூர் செய்திகள்

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு

Published On 2023-09-26 06:37 GMT   |   Update On 2023-09-26 06:37 GMT
  • விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்
  • பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

வேலாயுதம்பாளையம்,  

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் ஆய்வுத்துறை தலைவர், வணிகவியல் (முன்னாள் பதிவாளர்), பேராசிரியர் மற்றும் சிஎம்பி தலைவர்சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் செயலாளர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்எஸ்.குப்புசாமி, கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், கல்லூரியின் டீன் (அட்மிஷன்) கே.சுந்தராஜு ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மேலாண்மை துறைத்தலைவர்கே.ராஜேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும்போது தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றியும், தொழிலைத் தொடங்க விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோயம்புத்தூர் வனபிரஸ்தாவைச் சேர்ந்த மாணவர் குழுவினர தலைமைத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

Tags:    

Similar News