உள்ளூர் செய்திகள்

காப்பீட்டு நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

Published On 2022-08-11 14:27 IST   |   Update On 2022-08-11 14:27:00 IST
  • காப்பீட்டு நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது
  • லாரி காணாமல் போன வழக்கில் தீர்ப்பு

கரூர்:

காணாமல் போன லாரிக்கு காப்பீடுத்தொகை வழங்காத நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கருப்பகவுண்டன்புதூர் கிழக்கை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் மனைவி ப்ரியா. இவர்கள் மகன்கள் நிதிஷ் (வயது 17), வேலுசாமி (9). பாலுசாமி கடந்த 2012-ம் ஆண்டு சொந்தமாக லாரி வாங்கியுள்ளார். கரூரை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் 2012-ம் ஆண்டு பிப்.6-ந் தேதி ரூ.10 லட்சத்திற்கு லாரியை காப்பீடு செய்துள்ளார். வீட்டு முன் நிறுத்தியிருந்த லாரி மார்ச் 3-ந் தேதி காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்த பாலுசாமி, காப்பீடு நிறுவனத்தில் இழப்பீடு கோரியுள் ளார். ஆனால், காப்பீடு நிறுவனத்திற்கு தாமதமாக தகவல் தெரிவித்ததாகக்கூறி காப்பீடு இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைத்தில் பாலுசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நடந்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 10 -ந் தேதி பாலுசாமி உயிரிழந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை லாரி காணாமல் போன தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும், சேவை குறைப்பாட்டுக்காக இழப்பீடாக ரூ.2 லட்சத்தை புகார் அளித்த தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும் இத்தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் வழங்கவேண்டும். வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News