உள்ளூர் செய்திகள்

கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை

Published On 2022-12-14 09:25 GMT   |   Update On 2022-12-14 09:25 GMT
  • கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
  • விவசாயி கொலை வழக்கில்

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயியான இவர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஆடு விற்பனை செய்வதாகக் கூறி சரவணன் மாரியப்பனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணனிடம் சென்று மாரியப்பன் ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு பணமாக கொடுத்து விடுவதாக சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இதில் சரவணணை ஆடு வெட்டும் கத்தியால் மாரியப்பன் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாரியப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை ெசலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மாரியப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News