உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published On 2022-10-18 07:11 GMT   |   Update On 2022-10-18 07:11 GMT
  • சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
  • கால பைரவருக்கு சிறப்புபூஜை

கரூர்:

கரூர் மாவட்ட சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான சிறப்பு பூஜை நடந்தது.

சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் கால பைரவர் திருக்கோலமும் ஒன்றாகும். காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் எடுத்தமையால் கால பைரவர் என அழைக் கப்படுகிறார். சூரிய பகவானின் மகனான சனீஸ்வரர் காலபைரவரை வழிபட்டு அருள்பெற்று நவக்கிரக பதவியும், ஈஸ்வர பட்டமும் பெற்றுள்ளார் என்பது வரலாறு.

சனீஸ்வரருக்கு கால பைரவர் குருவாக கருதப்படுகிறார். கால பைரவரை ஒவ்வொரு அஷ்டமி அன்று வழிபட்டு வந்தால் கண்டம், பயம் நீங்கும், பல வியாதிகள் குணமாகும், வியாபாரம் நன்கு நடக்கும், தரித்திரம் நீங்கும் என்பது ஐதீகம்.

க.பரமத்தி சௌந்தர நாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந் திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன் னைவனநாதர் கோயில் ஆகிய கோயில்களில் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமியான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமா னோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News