உள்ளூர் செய்திகள்

4 கொத்தடிமைகள் மீட்பு

Published On 2022-10-12 14:42 IST   |   Update On 2022-10-12 14:42:00 IST
  • 4 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.
  • இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வந்துள்ளனர்.

கரூர்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, தெத்து பட்டியில் தனியார் எலக்ட்ரிக்கல் நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இங்கு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நான்கு பேர், கடந்த 15 நாட்களுக்கு முன், இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், நிறுவனத்தினர் சம்பளம் வழங்காமல், தங்களை கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பதாக அந்த இளைஞர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களது, பெற்றோர், அங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கரூர் ஆர்.டி.ஓ., ரூபினா தலைமையில் ஆய்வு செய்தனர். அங்கு, கொத்தடிமைகளாக வேலை செய்த, 4 இளைஞர்களை மீட்டனர். பின், சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து வந்த குழுவினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News