உள்ளூர் செய்திகள்

கூலித் தொழிலாளி மாயம்

Published On 2023-10-06 11:55 IST   |   Update On 2023-10-06 11:55:00 IST
கூலித் தொழிலாளி மாயம்

   வேலாயுதம்பா ளையம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து( வயது 35). இவர் கரூரை சேர்ந்த ஒரு தனியார் தார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மணிமுத்து, கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்ன ரெங்க ம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அந்தப் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக கோபித்துக் கொண்டு மணி முத்து விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மணி முத்துவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர் வீடுகளிலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மணி முத்துவை தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமுத்து தானாக எங்காவது சென்று விட்டாரா ? அல்லது வேறு காரணத்தால் அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News