உள்ளூர் செய்திகள்

உலமாக்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். அருகில் கலெக்டர் அரவிந்த் உள்ளார்.

குமரி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்

Published On 2022-10-22 10:04 GMT   |   Update On 2022-10-22 10:04 GMT
  • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
  • வேம்பனூர், சுசீந்திரம், தேரூர் குளங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படு த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உல மாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் தனபதி வரவேற்று பேசினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கினார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த 7 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் நீர் நிறை குமரி இணைய தளத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களை யும் செயல்படுத்தி வருகிறது.

தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மீதமுள்ள திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.குப்பை இல்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வீடுகளில் இருந்து வாங்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

குளங்கள், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு பகுதியாக சென்று மனுக்களை பெற்று அந்த மனுக்க ளுக்கு உடனடி தீர்மான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன.வேம்பனூர், சுசீந்திரம் தேரூர் குளங்க ளுக்கு அதிகளவு பறவைகள் வருகின்றன. பறவைகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த மூன்று குளங்களுக்கும் ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், வன அதிகாரி இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News