உள்ளூர் செய்திகள்

இரணியல் அரசு பள்ளியில் திருட்டு போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-10-07 10:00 GMT   |   Update On 2023-10-07 10:00 GMT
  • பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்
  • இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும்

நாகர்கோவில் : திங்கள்நகரில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இரணியல் போலீஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள இந்த பள்ளி இருக்கும் இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்ப டும். காலாண்டு தேர்வு மற்றும் தொடர் மழை விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறந்தது. வழக்கம்போல மாலை பள்ளியை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அலுவலக ஊழி யர்கள் பள்ளியை திறக்க வந்தனர். அப்போது உடற்கல்வி ஆசிரியை லில்லிபாய் தலைமை ஆசிரியர் அறை கதவு பூட்டு உடைந்த நிலையில் அருகில் ஒரு கடப்பாரை கம்பியும் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பைல்கள், ஆவணங்கள் சிதறிய நிலையில் கிடந்தது. மேலும் பள்ளி அறை சாவி கொத்தையும் மர்ம நபர்கள் மேசையில் எடுத்து வைத்திருந்தனர். இதுகுறித்து லில்லிபாய் தலைமை ஆசிரியை சாந்தி, உதவி தலைமை ஆசிரியை எமிலியா ஜெசி ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் இதுகுறித்து எமிலியா ஜெசி இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரணியல் இன்ஸ் பெக்டர் செந்தில் வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சுமன் நேரில் சென்று ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். போலீஸ் விசாரணையில் பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆரை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருந்தது தெரிய வந்தது.

பீரோவில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லாத தால் மர்ம நபர்கள் ஏமாற்றத் துடன் சென்றுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பள்ளியின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Tags:    

Similar News