உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் பட்டறையில் இருந்து மாயமானவர் திருட்டு நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை - 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைதான மேற்கு வங்க வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்

Published On 2022-12-24 08:56 GMT   |   Update On 2022-12-24 08:56 GMT
  • 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.
  • தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

நாகர்கோவில் :

வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும், தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அடல்தாஸ் என்ற சுஜய் (வயது 32) மற்றும் அமல்பஸ்வான் ஆகியோர், குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் வேலை பார்த்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூ ரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் இந்த பட்டறையை நடத்தி வந்தார். இவர் சம்பவத்தன்று 37 பவுன் நகைகளை, அடல்தாஸ் மற்றும் அமல் பஸ்வான் ஆகியோரிடம் கொடுத்து குறிப்பிட்ட நகை கடையில் கொடுத்து வரும்படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் நகை யுடன் மாயமாகி விட்டனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அடல்தாஸ் மற்றும் அமல்பஸ்வானை தேடினர். அவர்களது சொந்த ஊர் சென்று தேடிய போது அவர்கள் அங்கு இல்லை.

தலைமறைவான 2 பேரை யும் பிடிக்க, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரகசிய மாக கண்காணித்து வந்த னர். இந்த நிலையில் அடல் தாஸ், மேற்கு வங்கா ளத்தில் உள்ள தனது சொந்த ஊரான மொத்த லாவிற்கு வந்திருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று அடல்தாசை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்ய ப்பட்டு உள்ளார்.

கைதான அடல்தாசை போலீசார் மார்த்தாண்டம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் நகை கள் எதுவும் இல்லை. இது பற்றி கேட்ட போது, திருடிச் சென்ற நகைகளை விற்று, உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதுபற்றி விசாரணை நடத்தும் போலீசார், வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக உள்ள அமல் பஸ்வானை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News