உள்ளூர் செய்திகள்

மினி மாரத்தான் போட்டியை குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குலசேகரத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி

Published On 2022-11-21 08:10 GMT   |   Update On 2022-11-21 08:10 GMT
  • குலசேகரம் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இன்றைய சமுதாயத்தில் போதை பொருட்களுக்கு அடிமை யாகும் மாணவர்கள், இளைஞர்கள் அதன் அழிவை உணர்ந்து அதில் இருந்து விடுபட உறுதிமொழி ஏற்று குலசேகரத்தில் செயல்ப டும் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் நேபாள நாட்டிற்குச் சென்று சிலம்பு விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியானது திற்பரப்பு பகுதியில் இருந்து 6000 மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை குல சேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டாக்டர் நெல்சன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 65 வயதான மூதாட்டி பள்ளி மாணவ- மாணவிகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ் வித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மூதாட் டியை கவுரவிக்கும் விதமாக ஊக்க தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மூதாட்டி இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன நலம் குன்றிய மாணவர் ஒருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தமாணவனை கவுரவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News