உள்ளூர் செய்திகள்
வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்
இரணியலில் வக்கீல்கள் சாலை மறியல்
- 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
- சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரி:
இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, பள்ளி க்கூடம், மருத்துவமனை என்று பொது மக்கள் வந்து செல்லும் வழியில் கழிவு நீர் தேங்கி உள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அகற்ற கோரி இரணியல் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி மற்றும் போலீசார், இரணியல் பஞ்சாயத்து செயல் அலுவலர் லெட்சுமி ஆகியோர் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் 30 நாட்களுக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.