உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று போலீஸ் சூப்பிரண்டுஅலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் மயங்கியதால் பரபரப்பு

Published On 2023-01-18 08:57 GMT   |   Update On 2023-01-18 08:57 GMT
  • வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  • குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக மனுக்கள் வந்துள்ளது. போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் தினமும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் இந்த மனுக்களை பெற்று அதனை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வாரத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து மனுக்கள் அளிப்பதற்காக புதன் கிழமை தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனுக்களை கொடுத்து செல்கிறார்கள்.

இன்றும் மனுக்கள் அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர். அதன் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை மேற் கொண்டார்.

குறிப்பாக பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்துள்ளது. மேலும் போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுறுத்தினார். மனு அளிப்பதற்காக இன்று வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.சிறிது நேரத்துக்கு பிறகு அந்த பெண் சகஜநிலைக்கு திரும்பினார்.பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.மனு கொடுக்க வந்த இடத்தில் பெண் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News