உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
- கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நெய்யூர் ஹாக்கர் தெருவினை சேர்ந்தவர் பிறைட் சாலமன் (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஏதோ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கிய நிலையில் வீட்டின் அருகே உயிருக்கு போராடியபடி கிடந்ததாக தெரிகிறது.
உறவினர்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிறைட் சாலமன் உயிர் இழந்தார். இது குறித்து அவரது மருமகன் ஜெரின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.